அ.தி.மு.க.வில் திடீரென சடசடவென பண மழை பொழிந்திருக்கிறது. தீபாவளியையொட்டி சேலத்தில் அ.தி.மு.க.வினரை சந்தித்த எடப்பாடி, அனைவருக்கும் வேட்டி, சட்டை கொடுத்து அசத்தியிருக்கிறார். அத்துடன் தமிழகம் முழுவது முள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு, தலைக்கு இவ்வளவு என கோடிகளில் பணம் கொடுத்துள் ளார். எடப்பாடியின் இந்த பண மழையால் மகிழ்ச்சியில் துள்ளுகிறது அ.தி.மு.க. வட்டாரம். எடப்பாடிக்கு எதிராக அவரை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க சசிகலாவும் மிகப்பெரிய பண விநியோகத்தை திட்டமிட்டு வருகிறார். ‘சசிகலா வாவது பணத்தை அவிழ்ப்பதாவது’ என சந்தேகப் படும் கட்சிக்காரர்களுக்கு அவ்வப்போது பணத்தை வாரிக்கொடுத்து அசத்திவருகிறார் திவாகரன். வார்டுகள், ஒன்றியங்கள் என கட்சியின் அனைத்துப் பிரிவினர்களுக்கும் அவர் செல்லுமிட மெல்லாம் கூடவே பணமும் பாய்கிறது. இறுதிக் கட்டமாக எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்து எடப்பாடியை எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளராக தன்னையும், எதிர்க் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும் கொண்டு வருவதுதான் சசிகலாவின் திட்டம்.

Advertisment

eps

இந்தத் திட்டத்தை வேலுமணி திண்டுக்கல் சீனிவாசனிடம் சொல்ல, அவர் அதை அப்படியே எடப்பாடியிடம் சென்று ஒப்பித்து விட்டார். இதைக் கேட்டு டென்ஷனான எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் இடையே முட்டல், மோதல் அதிகமானது. வேலுமணி வெளிப்படையாகவே எடப்பாடியுடன் மோதத் தொடங்கினார். தனக்கு நெருக்கமான அ.தி.மு.க. தலைவர்களை எடப்பாடிக்கு எதிராகவும் சசிக்கு ஆதரவாகவும் திரட்டத் தொடங்கிவிட்டார் வேலுமணி. யாரும் வேலுமணிக்கு அதரவாக செல்லமாட் டார்கள் என எடப்பாடி நினைத்தார். எடப்பாடி தலைவராக உள்ள கட்சியில் வேலுமணி ஆதிக்கம் அதிகமாக உள்ளது என குரல் கொடுத்து, எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ். முகாமில் இருந்தவர் வைத்திலிங்கம். அவரே வேலுமணிக்கு ஆதரவாக திரும்பினார். அதற்குக்காரணம் சசிகலா. சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வியூகத்தில் வேலுமணி வேலை செய்ய, எடப்பாடியின் உறவினரான தங்கமணி, சசிகலா கோஷ்டியை கடுமையாக எதிர்த்து வேலை செய்த வீரமணி, எடப்பாடிக்கு ஒரு காலத்தில் போட்டியாளராக கூவத்தூரில் முன்னிறுத்தப்பட்ட செங்கோட்டையன் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் எடப்பாடிக்கு எதிராகத் திரண்டார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எடப்பாடிக்கு எதிரான எதிர்ப்பு வலுவாகிக்கொண்டே வந்தது.

“சசிகலா டிசம்பர் மாதத்தை எடப்பாடிக்கு எதிரான மாதம் என அறிவித்தார். டிசம்பர் மாதத் தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு வருடாவருடம் கூடும். இந்த வருடம் கூடும் பொதுக்குழுவில் எடப்பாடிக்கு எதிராக பெரிய கலவரம் நடத்த திட்டமிட்டு பெரும் பண விநியோகத்தை அ.தி.மு.க.வில் நடத்துவதற்கு காய்நகர்த்தி வருகிறார் சசிகலா. முன்னர் சசிகலாவிடம் பண விநியோகப் பொறுப்பை மேற்கொண்ட கேசியர் எடப்பாடிக்கு, சசி எப்படி பணம் கொடுப்பார் என்கிற டெக்னிக் நன்றாகவே தெரியும். அதனால் அவரும் முந்திக்கொண்டு பண விநியோகத்தை ஆரம்பித்து விட்டார்” என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

Advertisment

சசிகலா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர். அவர் தேர்தலில் நிற்க முடியாது என்பதே அவரது பலவீனமாக இருக்கிறது. அந்தத் தடை 2027க்குப் பிறகு நீங்கி விடும். அப்பொழுது ஒரு எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்யவைத்து சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைய சசி திட்டமிட்டுள்ளார். சசி எம்.எல்.ஏ.வாக நுழைந்தால் அ.தி.மு.க.வில் டாப் அவர்தான் என்கிற கோணத்தில் சசியின் வியூகங்கள் அமைந்துள்ளன என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள். சசியின் தாக்குதலிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள தனக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக நடிகர் விஜய்யை நினைக்கிறார் எடப்பாடி. எடப்பாடியை அடித்து நிர்மூலமாக்கும் ஆயுதமாக பா.ஜ.க.வை கையில் ஏந்துகிறார் சசிகலா. கூட்டணி விசயத்தில் தனக்கு உடன்படவில்லை என எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருக்கும் பா.ஜ.க., அவருக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனை ரெய்டு நடவடிக் கைகள் மூலம் புரட்டியெடுக்கிறது. சமீபத்தில் இளங்கோவன் வீட்டில் நடத்திய ரெய்டில் 142 கோடியைக் கைப்பற்றி எடப்பாடிக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. தொடர்ந்து இளங்கோவனை ரெய்டு நடவடிக்கைகள் மூலம் துன்புறுத்தி வருகிறது. இளங்கோவனிடம் உள்ள பணம் எடப்படிக்கு சொந்தமானதா என ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த களேபரங்களுக்கு நடுவே வெற்றிகரமாக எம்.எல்.ஏ.க்களுக்கு பண விநியோகம் செய்து தனது திறமையை நிரூபித்திருக்கிறார் எடப்பாடி.

நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி, பா.ஜ.க. மற்றும் சசிக்கு அ.தி.மு.க.வில் இட மில்லை என காய் நகர்த்திச் செல்லும் எடப் பாடிக்கு சாதகமான சிக்னல்கள் விஜய் தரப்பிலிருந்து இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால், நடிகர் விஜய்யை எதிர்த்து யாரும் பேசக்கூடாது என ஒரு பெரிய தடை உத்தரவையே போட்டு, நடிகர் விஜய்யின் க்ரீன் சிக்னலுக்காக வெயிட் செய்கிறார் எடப்பாடி. நடிகர் விஜய்காந்தைப் போல 40தொகுதிகள் வெற்றி பெற்று எடப்பாடி முதல்வர், நடிகர் விஜய் துணை முதலமைச்சர் என எடப்பாடி ஆதரவு தூது அனுப்பியுள்ளார். தனது மகன் மிதுனை அனுப்பி ஒரு ரவுண்டு பேச்சுவார்த்தை யும் நடிகர் விஜய்யுடன் நடத்தியிருக்கிறார். லாட்டரி அதிபர் மார்ட்டின் மூலம் பிரபல தேர்தல் வியூக அமைப்பாளரான பிரஷாந்த் கிஷோரை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் அமைக்கக் கொண்டுவருவது மற்றும் அடுத்து அமையும் ஆட்சியில் லாட்டரியை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவது என தனது பிளான்களில் பக்கா உற்சாகமாகச் செயல்படும் எடப் பாடியை முறியடிக்க ரெய்டு அஸ்திரங் களை பா.ஜ.க. மூலம் ஏவ தயாராகி வருகிறார் சசிகலா. இவையெல்லாம் வருகிற டிசம்பர் மாதத்தில் உச்சம்பெறும் என்கின்றன அ.தி.மு.க. வட்டாரங்கள்.